000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சமண தீர்த்தங்கரர்கள் |
300 | : | _ _ |a சமணம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a சமணக் கொள்கைகளை மக்களிடையே பரப்ப காலந்தோறும் தோன்றிய சமண தீர்த்தங்கரர்கள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தீர்த்தங்கரர் என்பவர் சமண சமயத்தின் படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். தமிழில் இவர்களை 'அருகன்' என்பர். அருகன் என்றால் கருத்துக்களால் நம் 'அருகில் இருப்பவர்' என்பது பொருள். ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகிறார்.சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்திலே பரவச் செய்வதன் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் என்னும் பெரியார்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள் என்பது சமண சமயக் கொள்கை, இதுவரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும், இனியும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இந்த மதக் கொள்கையாகும். தீர்த்தங்கரர்கள் அருகக் கடவுளைப் போன்றே தெய்வமாகத் தொழப்படுகின்றனர். இதுவரை தோன்றியுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின் பெயர் வருமாறு; 1. விருஷப தேவர் (ஆதி பகவன்.) 2. அஜிதநாதர். 3. சம்பவ நாதர் 4. அபி நந்தனர் 5. சுமதி நாதர் 6. பதும நாபர் 7. சுபார்சவ நாதர் 8. சந்திரப் பிரபர் 9. புஷ்ப தந்தர்(சுவிதி நாதர்) 10. சீதள நாதர் 11. சீறீயாம்ச நாதர் 12. வாசு பூஜ்யர் 13. விமல நாதர் 14. அநந்த நாதர் 15. தருமநாதர் 16. சாந்தி நாதர் 17. குந்துநாதர்(குந்து பட்டாரகர்) 18. அரநாதர் 19. மல்லிநாதர் 20. முனிசு வர்த்தர் 21. நமிநாதர்(நமிபட்டாரகர்) 22. நேமிநாதர் (அரிஷ்ட நேமி) 23. பார்சுவ நாதர் 24. வர்த்தமான மகாவீரர் சிதரால் மலையில் அமைந்துள்ள சமண சிற்பங்களில் வரிசையாக தீர்த்தங்கரர்கள் வடிக்கப்பட்டுள்ளன. |
653 | : | _ _ |a 24 தீர்த்தங்கர்கள், சமணர் குடைவரை, சமண தீர்த்தங்கரர்கள், சிதரால், சிதறால், கன்னியாகுமரி, தோவாளை, சமணர் சிற்பங்கள், சமணர் குடைவரை, சமணர் சிற்பங்கள், பாண்டிய நாட்டு சமணம், பாண்டிய நாட்டு சமண சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a சிதரால் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c சிதரால் |d கன்னியாகுமரி |f தோவாளை |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 8.3323779 |
915 | : | _ _ |a 77.2384304 |
995 | : | _ _ |a TVA_SCL_000287 |
barcode | : | TVA_SCL_000287 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |